தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் என். ஆனந்த் பங்கேற்பு
சென்னை, 05 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எஸ். கிஷோர் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆ
Nj


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எஸ். கிஷோர் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, மணமக்களான கே. ஸ்டீவாக் மற்றும் டி. டைஷ்னி ஆகியோரை வாழ்த்தினார்.

விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன், தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ