Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 05 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசால் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 30.06.2026 வரை விண்ணப்பிப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பொதுமக்கள் நலன் கருதி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் செய்வதற்கு 15.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b