பீகாரில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் - காவல்துறை தீவிர விசாரணை
பீகார், 06 ஜூலை (ஹி.ச) பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள நவாடா கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த பெண் ஒருவரை, அவரது கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக காவல்துறை இன்று தெரிவித்தது. உயிரிழந்த பெண் ரிங்கு குமாரி
முசாஃபர்பூரில் கணவனால் மனைவி கழுத்து அறுத்து கொலை - காவல்துறை தீவிர விசாரணை


பீகார், 06 ஜூலை (ஹி.ச)

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள நவாடா கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த பெண் ஒருவரை, அவரது கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக காவல்துறை இன்று தெரிவித்தது.

உயிரிழந்த பெண் ரிங்கு குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் ராஜேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுளளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வீடு பாருராஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹர்னாஹி பகுதியில் அமைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சரையா துணைக் காவல் கண்காணிப்பாளர் அபிஜித் கௌர் கூறுகையில்,

திருமணமான அந்தப் பெண் தாய்வீட்டுக்கு வந்திருந்தார். முந்தைய நாள் அவரது கணவர் மனைவியை சந்திக்க வந்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார் என எஸ்.டி.பி.ஓ அபிஜித் கௌர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, தடயங்களை சேகரிக்க தடய அறிவியல் ஆய்வக குழுவினரை வரவழைத்தனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b