கனமழையால் மும்பையில் போக்குவரத்து முடக்கம் - பொதுமக்களுக்கு அமைச்சர் கிரிஷ் மகாஜன் எச்சரிக்கை
மகாராஷ்டிரா, 06 ஜூலை (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் தீவிர மழை காரணமாக அதிகாரிகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளன
inister Girish Mahajan issues warning


மகாராஷ்டிரா, 06 ஜூலை (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் தீவிர மழை காரணமாக அதிகாரிகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகாஜன் கூறுகையில்,

பொதுமக்கள் தற்போதைக்கு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். பல பகுதிகளில் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சில இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

தொடர் மழையால் சாலை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிலைமையை ஆய்வு செய்தார்.

அரசு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தொடர்புடைய அனைத்துத் துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

நிலச்சரிவைத் தொடர்ந்து, மும்பை விரைவுச் சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரை அரசியலாக்க வேண்டாம். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசின் முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.

Hindusthan Samachar / vidya.b