சிவப்பு பஸ் வராது என்ற இடத்தில் விமான நிலையம் வந்துள்ளது - அமைச்சர் லோகேஷ் பெருமிதம்
விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.) “சிவப்பு பஸ் கூட வராது என்று கேலி செய்த இடத்தில் இன்று விமான நிலையம் அமைந்துள்ளது” என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார். வட ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த
A


விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

“சிவப்பு பஸ் கூட வராது என்று கேலி செய்த இடத்தில் இன்று விமான நிலையம் அமைந்துள்ளது” என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

வட ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த காலங்களில் சிலர் வட ஆந்திரப் பகுதியையும், அங்குள்ள மக்களையும் குறைத்து மதிப்பிட்டதாக விமர்சித்தார்.

விழாவில் அவர் கூறியதாவது:-

“சிவப்பு பஸ் வராது என்ற இடத்தில் இன்று விமான நிலையம் வந்துள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடியும் இங்கு வந்துள்ளார். இதுதான் வட ஆந்திராவின் பதிலடி. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

வட ஆந்திர மக்களின் நீண்ட நாள் கனவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு அளித்து வருவதாகவும், அவரது ஒத்துழைப்புடன் ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

இயற்கை வளங்கள் நிறைந்த வட ஆந்திரப் பகுதியின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும், இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த விமான நிலையம் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு “சக்தி இயந்திரமாக” மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், விமான நிலையத்தை விரைவாக கட்டி முடித்த ஜி.எம்.ஆர். நிறுவனத்தையும் பாராட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA