Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள்
இருவரின் நட்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகாவாராயினும் நாகாக்க வேண்டும் என்ற திருக்குறளின் வழியில், நாவடக்கத்துடன் பேசுவதே தமிழ் மக்களின் மாண்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் தனது மாண்பைத் தவறவிடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்களின் அன்புக்குரிய அக்கா திரிஷா பற்றி யாரேனும் தவறாகப் பேசினால் அதனை ஏற்க முடியாது என்றும், எல்லையை மீறினால் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற முழக்கத்துடன், மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்ற தலைமையகம் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் கூட்டப்பட்டுள்ளது
Hindusthan Samachar / ANANDHAN