ராகுல் காந்தி பொய்களை பரப்புகிறார் - பாஜக எம்பி அனுராக் தாகூர் விமர்சனம்
புதுடெல்லி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின் போது பாஜக எம் பி அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாகூர் கூறுகையில், ர
ராகுல் காந்தி பொய்களை பரப்புகிறார் - பாஜக எம்பி அனுராக் தாகூர் விமர்சனம்


புதுடெல்லி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின் போது பாஜக எம் பி அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாகூர் கூறுகையில்,

ராகுல் காந்தி உள்துறை அமைச்சரிடம் பதில் கேட்கிறார், ஆனால் அவையில் கலந்து கொள்வதில்லை. உள்துறை அமைச்சர் பதிலளிக்க தயாராக உள்ளார், ஆனால் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க மட்டுமே பொய்களை பரப்பி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் காவல்துறை நடவடிக்கை குறித்து பேசிய அவர், ஜார்க்கண்ட் இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விதமும், அத்துமீறல்களும் ராகுல் காந்தியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

அவரது ஆதரவு பெற்றவர்கள் ஆளும் மாநிலத்தில் இளைஞர்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு எப்படி நீதி மறுக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b