அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
ஈரோடு, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண்டல கூட்டம் ந
GK Vasan


ஈரோடு, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில்,

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண்டல கூட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் பெரும்பாலை இடங்களில் பலப்படுத்த உள்ளோம்.. உள்ளாட்சி தேர்தலில் பலம் வாய்ந்த இடங்களை தேர்வு செய்து போட்டியிட உள்ளோம்.

தமிழகம் முழுவதும் தட்கல் மூலம் மின்னிணைப்பு வேண்டி 50,000 விவசாயிகளின் டெபாசிட் தொகை 1500 கோடி இருப்பு உள்ளது. அரசு உடனடியாக அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

காவேரி,கோதாவரி, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்க அரசின் கோரிக்கையை, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

கல்வி கடன் தற்போது முக்கியமாக உள்ளது,தற்போது முறையாக சரியாக கல்வி கடன் கிடைக்கவில்லை அரசு கவனம் செலுத்த வேண்டும் தேசிய மையமாக காணப்பட்ட ஆண்டுகளுடன் கலந்து பேசி மத்திய, மாநில அரசு கவன செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பவானி பாசன வாய்க்கால் கடும் வறட்சியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் சீமை கருவேலி மரங்களை தமிழக அரச அகற்ற வேண்டும்.

ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்துகிறோம்.

பயிர்களை வனவிலங்குகள் தொடர்ந்து நாசப்படுத்துகிறது அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மூன்று மாதங்கள் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

மக்கள் எதிர்பார்க்கக் கூடிய ஊழல் ஒழிப்பை படிப்படியாக செய்து கொண்டுள்ளார்கள்.

ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.

மேகதாது அணை விவகாரம் காலம் நேரம் ஏற்றது போல அனைத்து கட்சிகளை கூட்டலாம்.

விவசாயிகளின் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு உயர்வு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

ஜாதி, மதம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது சட்டமன்றம், நாடாளுமன்றமும் அதன் அடிப்படையிலேய மரியாதை கொடுத்து வருகின்றனர் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN