Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் உலக இளைஞர்கள் தின எழுச்சி மாநாடு திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் பொன்.குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் இளைஞர் அணி தலைவர், மாவட்ட தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் பொன்.குமார் பேசுகையில்,
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய உலகம் என்ற காரணத்தினால் இளைஞர்களுடைய சக்தியை முறையாக பயன்படுத்துவதற்கு அவர்களுடைய நிறை மற்றும் குறைகளை ஆய்ந்து அவர்களுக்கான தலைமை பண்பை உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு வழி காட்டுவதற்கும், அதற்கான ஏற்பாடு செய்வதற்காகத் தான் உலக இளைஞர் தினத்தை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் மாநாடு நடைபெறுவதாகவும், இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிற முதலமைச்சருக்கு இந்த மாநாட்டில் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் 700 க்கும் அதிகமான மதுபான கடைகளை மூடியதற்கு வரவேற்பு அளிப்பதாகவும், இந்த காலகட்டத்தில் பள்ளிக்கூட பருவத்திலேயே இளைஞர்கள் போதைக்கு அடிமை ஆகி வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மது ஒழிப்பு என்பது முக்கியமானது ஒன்று இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி 700 க்கும் அதிகமான கடைகளை மூடியதைப் போன்று படிப்படியாக டாஸ்மார்க் கடைகளை முழுமையாக மூடி மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட இந்த மாநாட்டு மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
இளைஞர்களை ஊக்கப்படுத்தி அதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லா கடனை வழங்க வேண்டும், படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எனவே சுய தொழிலை ஊக்குவிக்கும் விதமாக வட்டி இல்லா கடன் மற்றும் பிணையம் இல்லாமல் கடன் வழங்க மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும், நீட் தேர்வு போன்றவை நுழைவுத் தேர்வுகள் இளைஞர்களின் எதிர்கால கனவை சிதைக்கிறது. பல உயிர்களைப் பறிக்கிறது. அதைத் தாண்டி நீட் தேர்வின் வினாத்தாள்கள் வெளியாகி மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த மாநாட்டின் மூலம் நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வின் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அரசியல் கடந்து மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி அதன் மூலம் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்தது இளைஞர்கள் கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கிறோம் எனவும், குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் ஒன்று திரண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு டெல்லி ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றார்.
தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே அரசு மதுபான கடை இயங்குவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ஒரு சில கடைகள் திறந்து இருக்கலாம், ஆனால் 717 கடைகள் மூடப்பட்டதாக பட்டியல் தமிழக அரசு கொடுத்துள்ளது என்றார்.
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும், திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருச்சி போன்ற மாநிலங்களில் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்றும், தமிழக அரசு 100 நாட்கள் இன்னும் நிறைவு செய்யவில்லை, அரசியலுக்கு புதியவர்கள் என்றும், தமிழக அரசுக்கு உறுதியாக 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும் ஆட்சி பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே அரசு மதுபான கடைகளை மூடியதை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் நல்லதை செய்யும் போது யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சமூகத்திற்கு எதிரான செயல் யார் செய்தாலும் அதனை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN