தொகுதி மறுவரையறை அவசியம் - பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் வலியுறுத்தல்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். முதலமைச்சர் கொண்டு வரும் தன
தொகுதி மறுவரையறை அவசியம் - பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் கூறுகையில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா தற்போது பரிசீலனை நிலையில்தான் உள்ளது என்றும், காலத்தின் தேவைக்கேற்ப கொண்டுவரப்படும் தேவையான மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக தீர்மானம் கொண்டுவருவதை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மக்கள் தொகை, நிர்வாக வசதி மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு முடிவுகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், அடுத்த தலைமுறையினரின் தேவையைக் கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வளர்ச்சித் திட்டங்களை அரசியல் காரணங்களுக்காகக் களங்கப்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Hindusthan Samachar / vidya.b