Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (பி.சி.) பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் இலவச தானியங்கி தையல் எந்திரங்கள் வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தை பி.சி. நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில் :
பெண்கள் குறைந்த உழைப்பில் வேகமாக தையல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நவீன தானியங்கி தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 பேர்
இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 1,000 பி.சி. பெண்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட உள்ளனர். பயனாளிகளின் வயது வரம்பு, குடும்ப ஆண்டு வருமான வரம்பு மற்றும் தகுதி நிபந்தனைகள் குறித்து அமைச்சர் நாளை அறிவிக்க உள்ளார்.
மேலும், விண்ணப்பிக்க தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
தகுதியான பெண்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாகவும், மீ-சேவா மையங்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. விண்ணப்பம் தொடங்கும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடர்பான வழிகாட்டுதல்களும் நாளை அறிவிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பி.சி. பெண்கள் தையல் தொழிலை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA