உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: துணை முதல்வர் பவன் கல்யாண்
அமராவதி , 13 ஆகஸ்ட் (ஹி.ச.) உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியி
A


அமராவதி , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பான ஒரு சிறிய முடிவு, மற்றொருவருக்கு மறுவாழ்வை வழங்கும் மிகப்பெரிய செயலாக அமையும். ஒருவரால் தனது வாழ்நாளை நீட்டிக்க முடியாத சூழ்நிலையிலும், அவரது உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இதன் மூலம் அவரது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் கிடைக்கிறது.

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அதிகமானோர் உறுப்பு தானம் செய்ய முன்வரும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு தானமும் உயிரைக் காக்க காத்திருக்கும் ஒருவருக்கு நம்பிக்கையை அளிக்கிறது. உறுப்பு தானம் செய்பவர்கள் தங்கள் மறைவுக்குப் பிறகும் பிறரின் வாழ்க்கையில் ஒரு சிறந்த மரபை விட்டுச் செல்கிறார்கள்.

எனவே, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த தாராளமான மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உயிர் தானம் செய்து, நம்பிக்கையை ஏற்படுத்தி, பல உயிர்களைக் காப்பாற்றுவோம்.இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA