Enter your Email Address to subscribe to our newsletters

லடாக், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நில அதிர்வால் பொதுமக்கள் சிறிது நேரம் அச்சமடைந்தனர், வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலநடுக்கம் பூமியின் மிகக் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால், லே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வுகள் பரவலாக உணரப்பட்டன.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவித அசம்பாவித தகவலும் பதிவாகவில்லை. உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லடாக் பகுதி நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது இதுபோன்ற லேசான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b