ரூ.8 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நவீன செயற்கை இழை தடகள ஓடுதளத்தை தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜ
ரூ.8 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நவீன செயற்கை இழை தடகள ஓடுதளத்தை தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று

(13 ஆகஸ்ட் 2026) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திற்கு இணையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ஓடுதளத்தில் தடகள வீரர்கள் மேற்கொண்ட நவீனப் பயிற்சி முறைகளையும், ஓட்டப் பந்தய ஒத்திகைகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் வீரர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழக விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்கும் வகையில், அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

திறப்பு விழாவின் சிறப்பம்சமாக, புதிய செயற்கை இழை ஓடுதளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வீரர்களுடன் இணைந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டார். இதனால் வீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது.

ஓடுதளத்துடன் சேர்த்து, நேரு விளையாட்டு அரங்கில் உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டுப் பிரிவுகளின் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b