Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் அணிவகுப்பு திடலில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய சில நொடிகளில், கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்து தேசியக்கொடி கீழே விழுந்தது. இதனால் விழா திடலில் சிறிது நேரம் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அறுந்த கயிற்றை சரிசெய்து புதிய கயிற்றை மாற்றினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரண்டாவது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இரு முறை தேசியக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிக்கம்பம் மற்றும் கயிறு முறையாக பராமரிக்கப்படாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b