சுதந்திர தின விழா -திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை
திண்டுக்கல், 15 ஆகஸ்ட் (ஹி.ச.) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ. 1 கோடியே 93 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பி
க


திண்டுக்கல், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ. 1 கோடியே 93 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து 3 வெண் புறாக்கள் மற்றும் கலர் பலூன்கள் வானில் பறக்க விட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 69 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலை துறை வேளாண்மை துறை உட்பட அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 213 அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

48 பயனாளிகளுக்கு 1 கோடியே 98 ஆயிரம் மதிப்புள்ள அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

Hindusthan Samachar / Durai.J