Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஆகஸ்ட் (H.S.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஜோதிமாணிக்கம் பெரிய கண்மாய் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தக் கண்மாயிக்கு வைகை அணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் நீர் பாசன பெரும் கண்மாயாகும்.,
இந்த பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தாலும் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வராததால் கண்மயில் நீர்மட்டம் குறைந்து சிறிய குட்டை போல் காணப்படுகிறது.
இந்நிலையில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகளை நாடி ஏராளமான பறவைகள் குவிந்து வருகின்றன.
இந்த கண்மாயின் நீர்நிலையின் கரையோர மரங்களிலும், புதர்களிலும் நூற்றுக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்துள்ளதுடன், சில பறவைகள் நீரில் இரை தேடியும், வானில் சிறகடித்தும் காணப்படுகின்றன.
மேலும் கண்மாயில் நீர் இல்லாததால் மரங்கள் மற்றும் தாமரை இலைகள் காய்ந்தும் காட்சியளிக்கின்றது.
Hindusthan Samachar / Durai.J