தமிழகம் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலம்
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடைபெற்றன. தமிழக முதல்வர் விஜய் சென்னை புனித ஜார்ஜ் கோட்
Independence Day celebrations held with great enthusiasm across Tamil Nadu


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடைபெற்றன.

தமிழக முதல்வர் விஜய் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தள்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை மேயர், மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்.

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜெனிபர் ஜோஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நீதித்துறையினருக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆன்மீகமும் தேசப்பற்றும் இணைந்த வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நாட்டின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்ட பின்னர், தீட்சிதர்கள் கோயில் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b