Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று நாட்டின் 80வது சுதந்திர தின விழா தலைநகர் அமராவதியில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியில் அதிகாரப்பூர்வமாக இந்த விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஆந்திர துணை முதல்வர் கே. பவன் கல்யாண் காக்கிநாடாவில் உள்ள மாவட்ட காவல் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பை ஆய்வு செய்தார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமராவதியில் உள்ள சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம் மற்றும் பிரகாசம் பேரேஜ் போன்ற முக்கிய இடங்கள் அனைத்தும் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதி போலீஸ் பரேட் மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அன்னம் ராமநாராயணா கலந்து கொண்டார்.
விழாவின்போது நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் ராமநாராயணா திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவரது உடல்நிலை சீரடைந்த நிலையில் அவர் மீண்டும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b