சுதந்திர தினத்தை முன்னிட்டு தாயில் பட்டியில் கிராம சபை கூட்டம்
விருதுநகர் , 15 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கிராமத்தில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
A


விருதுநகர் , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கிராமத்தில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து

கலந்து கொண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கிராமங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி தெருவிளக்கு வசதி வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும் பட்டாசு தொழிலுக்கு உறுதுணையாக இருப்பேன். எனக் கூறினார்.

தாயில்பட்டி ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் பல்வேறு தீர்மானங்களை வாசித்தார். நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் தமிழக வெற்றி கழகம் சார்பாக விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வி

தாயில்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்தானம், அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி கவிதா

மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA