80-வது சுதந்திர தினவிழா- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து சமாதான புறா மற்றும் மூவர்ண பலுன்களை பறக்கவிட்டார்!
திருப்பத்தூர், 15 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 80வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தேசிய கொடி ஏற்றினார். இத
க


திருப்பத்தூர், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 80வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தேசிய கொடி ஏற்றினார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர்.

நல்லுறவைப் பேணும் வகையில் சமாதான புறா மற்றும் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பறக்க விட்டனர்

இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

மேலும் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய

காவல் துறையினர் 31பேருக்கும்

மற்றும் பல்வேறு துறையை சார்ந்த 344 பேர் அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த சுதந்திர தின விழாவில் 2026 ஆம் ஆண்டிற்கான நலத்திட்ட உதவிகள் 34பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் 1 கோடியே 38லட்சத்து 70ஆயிரத்து 218ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் சுதந்திர மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவருடைய வாரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J