Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 15 ஆகஸ்ட் (ஹி.ச)
கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று தனது முதலாவது சுதந்திர தின தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் பினராயி விஜயன் அல்லாத வேறொரு தலைவர் கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.
மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா' பிரச்சார வழிகாட்டுதல்களின்படி சுதந்திர தின விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள அரசின் அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மட்டுமே இசைக்கப்பட்டு, வந்தே மாதரம் பாடல் தவிர்க்கப்பட்டது. இது அம்மாநிலத்தில் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் கோழிக்கோடு மாநகராட்சி மேயர் ஓ. சதாசிவன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், எல்டிஎஃப் (LDF) மற்றும் யுடிஎஃப் (UDF) கவுன்சிலர்கள் தேசிய கீதமான 'ஜன கண மன'-வைப் பாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது பாஜக கவுன்சிலர்கள் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடியதால் கோழிக்கோடு மாநகராட்சி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b