சிக்கிம் நீர்வளத்தை பாதுகாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய சேவை - இந்திய ராணுவம் ஏற்பாடு
சிக்கிம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) உயரமான மலைப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சிக்கிம் மாநிலம் சாங்குவில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திய ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவு இன்று திறந்து வைத்தது. பாபா
Indian Army arranges sewage treatment plant


சிக்கிம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

உயரமான மலைப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சிக்கிம் மாநிலம் சாங்குவில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திய ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவு இன்று திறந்து வைத்தது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) உருவாக்கிய உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடினமான தட்பவெப்ப நிலை மற்றும் நிலப்பரப்பிலும் திறம்பட செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை க்னாதங்-மச்சோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாமின் லெப்சா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ராணுவ பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இது சிவில்-ராணுவ ஒத்துழைப்பையும், சமூக நலனில் உள்ள அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பதன் மூலம் முக்கிய நீர்வளங்களை பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா கொள்கையின் உணர்வை பிரதிபலிப்பதுடன், கடினமான நிலப்பரப்பில் உள்ள சுற்றுச்சூழல் சவால்களுக்கு இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதையும் காட்டுகிறது.

சிக்கிம் மக்களால் கலாச்சார மற்றும் மத ரீதியாக புனிதமாக கருதப்படும் சோம்கோ எனப்படும் சாங்கு ஏரியைச் சுற்றியுள்ள மென்மையான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதில் இந்த திட்டம் பெரும் பங்காற்றும்.

ஏரியின் இயற்கை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிலையான வளர்ச்சிக்கான ராணுவத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுவதுடன், சிக்கிம் மக்களுடனான அதன் நீண்டகால பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

Hindusthan Samachar / vidya.b