Enter your Email Address to subscribe to our newsletters

டெல்லி, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
பீகார் மாநிலம் சீவானில் ஜூலை 25ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவலர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக, சீவான் மாவட்ட எஸ்.பி. பூரண் குமார் ஜாவை பீகார் அரசு பதவியில் இருந்து மாற்றியுள்ளது.
புதிய பதவி வழங்குவதற்கான பரிசீலனையில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
போராட்டக்காரர்களால் காவலர் சூழப்பட்டதால் தற்காப்புக்காக ஏ.கே.47 மூலம் நான்கு ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், அவை அனைத்தும் வானத்தை நோக்கியே சுடப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயமடையவில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே துப்பாக்கியால் சுட்ட காவலர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது சீவானில் பொறுப்பில் இருந்த அதிகாரிகளுக்கு இதுவரை புதிய பதவி வழங்கப்படவில்லை என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P