தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வருகை!!
அமராவதி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார். இதற்கான பயண அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மாலை 5.30 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனி வி
A


அமராவதி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்.

இதற்கான பயண அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மாலை 5.30 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார். இரவு சென்னையில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் தங்குகிறார்.

தொடர்ந்து, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் 31-வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

கூட்டம் நிறைவடைந்ததும், வியாழக்கிழமை மாலை 5.15 மணிக்கு சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள தனது உண்டவல்லி இல்லத்துக்கு திரும்புகிறார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA