Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை சட்டப்பேரவையில் இன்று உணர்ச்சிப்பூர்வமான விவாதம் அரங்கேறியது. தமிழர்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் சூழல் நாடு முழுவதும் நிலவி வருகிறதா என்ற ஆதங்கத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் வெளிப்படுத்தினார்.
சட்டசபை நடவடிக்கைகளின் போது பேசிய அவர், தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழர்களின் உயிருக்கும், உணர்வுக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்ற நிலை தொடர்வது வேதனைக்குரியது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
குறிப்பாக கர்நாடக அரசு அண்மையில் அறிவித்த இழப்பீட்டுத் தொகை குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கர்நாடக அரசு அறிவித்துள்ள இழப்பீடு என்பது போதுமானதாக இல்லை என்றும், அது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை துடைக்கும் வகையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இழப்பீட்டை வெறும் தொகையாக பார்க்காமல், தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழர்களின் பிரச்சினை என்றால் மட்டும் மெத்தனப்போக்கு காட்டப்படுவதாகவும், இந்த இளக்காரப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது என்றும் தனது பேச்சில் தாரகை கத்பர்ட் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / vidya.b