கர்நாடகாவில் மூன்று அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொலை - சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆவேச உரை
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடகாவில் அப்பாவிகளான மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று பேரவையில்
கர்நாடகாவில் மூன்று அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொலை - சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆவேச உரை


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடகாவில் அப்பாவிகளான மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று பேரவையில் கவன ஈர்ப்பு உரையாற்றினார்.

பேரவையில் பேசிய அவர் கூறியதாவது,

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கால்நடைகளை தேடிச்சென்றபோது அநியாயமாக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் கழகத் தலைவர். இது மனித உரிமைகள் மீறல். இது ‘Fake என்கவுண்டர்’

கர்நாடகாவில் பணி நிமித்தமாகவும், வாழ்வாதாரம் தேடியும் சென்ற மூன்று அப்பாவி தமிழர்கள் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது மனித நேயமற்ற செயல். இது தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். கர்நாடக அரசுடன் உடனடியாக தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நீதி கிடைக்க அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

Hindusthan Samachar / vidya.b