மாஞ்சோலை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை!
திருநெல்வேலி, 18 ஆகஸ்ட் (ஹி.ச) மாஞ்சோலை வனப்பகுதிக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைபவர்கள் மீது வனச் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் வனத்துறை சார்பில் ப
For


திருநெல்வேலி, 18 ஆகஸ்ட் (ஹி.ச)

மாஞ்சோலை வனப்பகுதிக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைபவர்கள் மீது வனச் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் வனத்துறை சார்பில் புதிய எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், மாஞ்சோலை வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறுவோர் மீது வனச் சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதியை உள்ளடக்கிய சுமார் 8,373 ஏக்கர் நிலங்கள் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதிகளை காப்புக்காடுகள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதிகளாக அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மாஞ்சோலை பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்கும் வகையில் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாஞ்சோலை பகுதியில் ஏற்கனவே வசித்து வரும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ