மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை
புதுடெல்லி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு கடந்த 13-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பல்வேறு மருத்து
A


புதுடெல்லி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு கடந்த 13-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஜே.பி.நட்டாவுக்கு இதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜே.பி.நட்டாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA