Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவில் இளையராஜாவுக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், மனுவை திருத்தம் செய்து தாக்கல் செய்ய கீதா தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam