Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
விசாகப்பட்டினத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஜூனியர் மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டி இன்று கடற்கரையில் பேரணி நடத்தினர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் நிறுத்தப்பட்டு மூன்றாவது நாளாகவும், வேலைநிறுத்தம் தொடங்கி பத்தாவது நாளாகவும் இந்த போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி போராட்டம் தீவிரமடைந்ததை.த் தொடர்ந்து இந்த பேரணி நடைபெற்றது. வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டிய நிலையில், ஆந்திரப் பிரதேசம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளை புறக்கணித்தனர்.
இதனால் தாய்-சேய் நலப் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து முக்கிய வார்டுகளை நிர்வகிக்க மூத்த பேராசிரியர்கள் மற்றும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை மருத்துவமனை நிர்வாகங்கள் நியமித்துள்ளன.
2026 ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 30 சதவீத உதவித்தொகை உயர்வு, மூத்த மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தும் திட்டத்தை திரும்பப் பெறுதல் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி எம்.எஸ்சி மற்றும் பிஎச்.டி பட்டதாரிகளை உதவிப் பேராசிரியர்களாக நியமித்தல் ஆகியவற்றை ஆந்திரப் பிரதேச ஜூனியர் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையை தொடங்கவும் மாநில அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b