ராஜீவ் காந்தி முன்னிலையில் 1991-ல் காங்கிரஸில் இணைந்தேன் - அதிர் ரஞ்சன் சவுத்ரி நினைவுகூரல்
புதுடெல்லி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ராஜீவ் காந்தி தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமரானார். அவர் 1989 டிசம்பர் 2 வரை பதவியில் இருந்தார். 1944 ஆகஸ்ட
Adhir Ranjan Chowdhury recalls


புதுடெல்லி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராஜீவ் காந்தி தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமரானார்.

அவர் 1989 டிசம்பர் 2 வரை பதவியில் இருந்தார்.

1944 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்த அவர், 1991 மே 21-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் புதுடெல்லியில் உள்ள வீர் பூமியில் ராஜீவ் காந்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கட்சிப் பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

நான் 1991-ல் ராஜீவ் காந்தி ஜி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், தேசிய கீதமான வந்தே மாதரம் தொடர்பாக காங்கிரஸ் எடுத்த முடிவு குறித்து பாஜக தெரிவித்த தாஜா அரசியல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், நாங்கள் யாரையும் தாஜா செய்யவில்லை என்று உறுதியாக மறுத்தார்.

கட்சி நிகழ்ச்சிகளில் தேசிய பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானம், 1937-ஆம் ஆண்டு கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b