சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் - நெல்லையில் அமைச்சர்கள் மரியாதை
திருநெல்வேலி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி பூலித்தேவனின் படையில் முதன்மைப் போர் வீரராகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். ஆங்கிலேயரின் பீரங்கிகளையே தனது கைகளால் தகர்த்தெறிந்த வீரம் கொண்டவர் என வரலாறு போற்றுகிறது. அந்த வகையில்
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் - நெல்லையில் அமைச்சர்கள் மரியாதை


திருநெல்வேலி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி பூலித்தேவனின் படையில் முதன்மைப் போர் வீரராகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். ஆங்கிலேயரின் பீரங்கிகளையே தனது கைகளால் தகர்த்தெறிந்த வீரம் கொண்டவர் என வரலாறு போற்றுகிறது.

அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255வது நினைவு தினம் இன்று (20.08.2026) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அரசு சார்பில் விழா நடைபெற்றது.

மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தாய் மண்ணின் விடுதலைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அவரது வீரமும் தியாகமும் என்றென்றும் நினைவு கூறத்தக்கது என அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

ஒண்டிவீரனின் நினைவு தினத்தை ஒட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் மற்றும் மணிமண்டபத்தைச் சுற்றிலும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b