ஜார்க்கண்டில் அரசு தேர்வுகளை ரத்து செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
ஜார்க்கண்ட், 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜார்க்கண்டில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்ட 11 மற்றும் 13-வது ஜார்க்கண்ட் பொது பணியாளர் தேர்வாணையத்தின் (JPSC) தேர்வுகள் மற்றும் அதன் அடிப்படையிலான நியமனங்களை ரத்து செய்த மாநில அரசின் உத்தரவுக்கு ஜார்க்
Jharkhand Highcourt


ஜார்க்கண்ட், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜார்க்கண்டில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்ட 11 மற்றும் 13-வது ஜார்க்கண்ட் பொது பணியாளர் தேர்வாணையத்தின் (JPSC) தேர்வுகள் மற்றும் அதன் அடிப்படையிலான நியமனங்களை ரத்து செய்த மாநில அரசின் உத்தரவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்த அதிகாரிகள், தங்களது நியமனத்தை ரத்து செய்த அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அரசு பிறப்பித்த ரத்து உத்தரவுக்கு தற்போது தடை விதித்துள்ளது.

ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்து, மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு JPSC மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய 44 ஆட்சேர்ப்புத் தேர்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தவர்களின் நியமனங்களும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

இதையடுத்து, தற்போது நியமனங்களை ரத்து செய்த அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், புதிதாக பணியில் சேர்ந்த அதிகாரிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்வுகளில் உண்மையில் முறைகேடு நடந்ததா, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்ற விசாரணை தொடர உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P