Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை,20 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு தமிழ் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் முக்கியமான வீட்டு பத்திரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர வலைவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல சினிமா காஸ்ட்யூம் டிசைனர் சுப்பிரமணி வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b