ஈரோட்டில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு - மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு
ஈரோடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச) ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாநகரப் பகுதியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மூன்று பேரில்
Three people affected by Dengue in Erode


ஈரோடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச)

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாநகரப் பகுதியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். மூவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்கியுள்ள குட்டைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி, நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும், காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களை உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b