Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கோவில்பட்டி பிரிவு அருகே நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நத்தத்தை சேர்ந்த சதாம்உசேன் மகன் ஹக்கீம்(30) (மாற்றுத்திறனாளி), மாரிமுத்து மகன் மருதுபாண்டி(32) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J