Enter your Email Address to subscribe to our newsletters

ராஜஸ்தான், 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடு முழுவதும் முதுநிலை ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான AIAPGET
(All India AYUSH Post-Graduate Entrance Test) 2026 நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. 200 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில், பதிவு செய்த 36,979 பேரில் 35,837 பேர் முதல் ஷிப்டில் தேர்வெழுதினர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பி.ஜி. கல்லூரி தேர்வு மையத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இந்த மையத்தில் 192 பேர் தேர்வெழுதிய நிலையில், மின்தடை காரணமாக 49 மாணவர்களால் தேர்வை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை.
இதனால் நாடு முழுவதும் தேர்வை முழுமையாக நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை 35,788 ஆக உள்ளது.
இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் Eduquity Career Technologies Private Limited நிறுவனம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு NTA வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வை முழுமையாக எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 49 மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த 49 பேருக்கான மறுதேர்வு செப்டம்பர் 1, 2026 காலை 10 மணிக்கு, ஜெய்ப்பூரில் உள்ள Rajasthan College of Engineering for Women தேர்வு மையத்தில் நடைபெறும் என NTA தெரிவித்துள்ளது.
மின்தடை காரணமாக தேர்வை முழுமையாக எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, அவர்களின் தேர்வு வாய்ப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P