மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது. நேற்று காலை நிலவரப்
தங்கம்


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது.

நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P