தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் இன்று பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டம்
டெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகின்றன. பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின், அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளுட
Meeting of BJP national office-bearers


டெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகின்றன. பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின், அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.

இதில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பொதுச்செயலாளர்கள், தேசிய துணைத் தலைவர்கள் மற்றும் பிற தேசிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் மற்றும் புதிய நிர்வாகிகளின் பொறுப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் 'மோடி 25' என்ற தலைப்பில் பாஜக தலைவர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு பாஜக அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான முன்னேற்பாட்டு பணிகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த முக்கிய கூட்டங்களில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நையினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b