Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வரும் Y. ஜாபர் சித்திக் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎஸ்பி ஜாபர் சித்திக் பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை தாக்கியதாகவும் அவரது மனைவி ஷோபனா கடந்த 4-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வேலூர் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள், பரமக்குடியில் உள்ள டிஎஸ்பியின் முகாம் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, இன்று இரவு 7 மணியளவில் பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் பரமக்குடி உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P