வந்தே மாதரம் விவகாரம் - நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பா.ஜ.க தீர்மானம்!
புதுடெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பாடுவது என்ற காங்கிரஸ் செயற்குழுவின் முடிவுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் சனிக்கி
Nitin Naveen will reach Bhubaneswar this evening


புதுடெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பாடுவது என்ற காங்கிரஸ் செயற்குழுவின் முடிவுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வந்தே மாதரம்’ பாடலின் மரியாதை, வரலாற்றுப் பெருமை மற்றும் தேசிய முக்கியத்துவத்தில் அரசியல் வசதி, மத ரீதியான சமரசம் அல்லது வாக்கு வங்கி அரசியலுக்காக எந்தவித சமரசத்தையும் பாஜக ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியப் பாடலை அரசியல் அல்லது குறுகிய வாக்கு வங்கி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என பாஜக கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 1937-ம் ஆண்டு காங்கிரஸ் எடுத்த முடிவை மீண்டும் உறுதி செய்து, காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் பாடலின் அடுத்தடுத்த சரணங்களில் இடம்பெற்றுள்ள மதம் சார்ந்த குறிப்புகளை கருத்தில் கொண்டு, முதல் இரண்டு சரணங்களை மட்டும் பயன்படுத்தும் நடைமுறை உருவானதாக காங்கிரஸ் தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, அதன் பொருள், தேசிய முக்கியத்துவம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு ஆகியவற்றை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல பாஜக சார்பில் பிரசாரம் நடத்தப்படும் என நிதின் நபின் தெரிவித்துள்ளார். பாஜக தொண்டர்கள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவம் மற்றும் முதல் இரண்டு சரணங்கள் என்ற விவகாரம், பாஜக–காங்கிரஸ் இடையிலான புதிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.

தேசியப் பாடலின் வரலாற்றுப் பெருமையை முன்னிறுத்தி பாஜக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ள நிலையில், 1937-ம் ஆண்டு எடுத்த வரலாற்றுத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தக்க வைத்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P