Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் விழா தொடக்க நிகழ்வாக ஏற்கனவே அமைக்கபட்ட 13 யாகசாலையில் கணபதி ஹோமம் ஸ்ரீலட்சமி நவகிரக ஹோமம் கோ பூஜை உள்ளிட்ட 23 ஹோமம் குண்டம் நடந்தேறியது.
இதனையடுத்து புனித நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மங்கள இசை தேவபாராயணம் ஐந்து கால பூஜை செய்து யாகசாலையில் வைத்து பூஜித்து கோவிலை சுற்றி வீதி உலா வரவழைக்கபட்ட பின்னர் கோவில் ராஜ கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் காமக்கூர் கிராமத்தை சுற்றியுள்ள ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று வணங்கி வழிப்பட்டனர். விழாவின் இறுதியில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது.
Hindusthan Samachar / vidya.b