Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,
முதல்வர் விஜய்க்கு நான் முன்வைக்கும் ஆலோசனைகளில் ஒன்று, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடும் ஊழல் தொடர்பான விஷயங்களில் சிங்கப்பூரின் சட்டங்களைப் பரிசீலிக்கலாம். சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடும் ஊழல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அங்கு இச்சட்டங்கள் உறுதியாகச் செயல்படுத்தப்படுகின்றன. அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஊதியத்தை வெகுவாக உயர்த்த வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு என்பது மிக முக்கியமானது.
அதேவேளையில், கடந்த காலத் தவறுகள் குறித்து விவாதிப்பதைத் தவிர்க்க, அவை தொடர்பான குற்றங்களுக்குப் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட வேண்டும். முறையான மறுஆய்வு மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு நீதிமன்றங்கள் இதனைச் செயல்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன.
அவற்றின் செயல்பாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். நான் என் வாழ்நாள் முழுவதும் லீ குவான் யூவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறேன்.
அவரது ஒவ்வொரு உரையையும் நான் வாசித்துள்ளேன்,
அவரது அணுகுமுறையை நாம் கட்டாயம் ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b