Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுடெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்திற்கு கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பது குறித்து இறுதி செய்வதாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.
குறுவை சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காத நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்காவது நீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த கூட்டங்களில் தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் நிலுவையில் உள்ள நீரின் அளவு, அணைகளின் நீர் இருப்பு மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நீர் பகிர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b