அண்ணாநகர் பெண் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம்
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அண்ணா நகரில் நேற்று காலை பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது எந்தவொரு பள்ளமும் இல்லை என்றும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிக
Sameeran


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அண்ணா நகரில் நேற்று காலை பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது எந்தவொரு பள்ளமும் இல்லை என்றும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெறவில்லை என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அந்தத் தெருவில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவடைந்து, பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் மீண்டும் மூடப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

பெண் உயிரிழந்ததற்கு மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மின் கேபிள் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், சாலையில் தண்ணீர் தேங்கியிருந்ததால் அந்த கேபிளில் இருந்து மின்சாரம் தண்ணீரில் பாய்ந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மின்வாரியக் குழுவினர் இன்று சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே பெண் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P