சென்னையில் 750 தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான குளிர்சாதன மின்சார பேருந்து சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், பொதுமக்களின் பயண வசதிக்காகவும், சுற்றுச்சூழல் மாசுப
சென்னையில் 750 தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான குளிர்சாதன மின்சார பேருந்து சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், பொதுமக்களின் பயண வசதிக்காகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கிலும் 750 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 5 மின்சார பேருந்துகளை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து அவர் தொடங்கி வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள வசதியுடன், நவீன குளிர்சாதன வசதி, சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட அனைத்து நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்துகள் சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும், இதன் மூலம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b