Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 ஆகஸ்ட் (ஹி.ச)
மிலாதுநபி பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அன்பு, இரக்கம், சகோதரத்துவம், நீதி மற்றும் அமைதி ஆகிய உயரிய நெறிகளை இந்த மண்ணில் பரப்புவதற்காக தனது வாழ் நாளையே அர்ப்பணித்தவர் நபிகள் நாயகம் அவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதகுலம் முழுவதும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய நபிகளாரின் போதனைகள், இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் பொருத்தமானதாகவும், அவசியமானதாகவும் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் காட்டிய அன்பு வழியையும், அமைதி நெறியையும் அனைவரும் பின்பற்றி, சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும், இந்த புனிதமிகு மிலாதுநபி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b