Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 24 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் பாதுகாப்பு கருதி, கடலுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளதால், தடையை விலக்கி மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவ கிராமங்களில் மீண்டும் மீன்பிடி பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது மீன்பிடி டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு மீண்டும் கடலுக்குள் புறப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b