Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சொகுசு காரும், வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சொகுசு காரில் பயணம் செய்த இராமேஸ்வரத்தை சேர்ந்த இளையராஜா மருது ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலையாங்குளம் அய்யனார் கோவிலில் வர்ஷாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சுற்றுலா வேனில் வந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த உதயசங்கர், மேல்சிகிச்சைக்காக நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN